தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

25.9.12

எங்கெங்கு காணினும் சக்தியடா!



பாவேந்தர் அவர்களின் முதல் பாட்டு `சக்திப் பாட்டு என்று அழைக்கப்படுகிறது.  பாரதியிடம் ஏகோபித்த அன்பைப் பெற்ற பாரதிதாசன் அடிக்கடி பாரதியின் இல்லத்திற்குச் சென்று வரும் வாய்ப்பினைப் பெற்றார்.  ஒரு நாள் பாரதியார், குயில் சிவா, வ.வே.சு ஐயர், போன்றோர் குழுமியிருந்தனர்.  அப்போது பாரதிதாசன் பற்றி அவர்கள் பேசலாயினர்.  பாரதியார் கனகசுப்புரத்தினம்
கவிதை எழுதுவதில் வல்லவர் என்று கூற உடனே கூடியிருந்தவர்கள் ஒரு கவிதை புனையுமாறு கேட்டனர். 
பாவேந்தர் அப்பொழுது இயற்றிய கவிதை வரிகள் தாம் இவை.
எங்கெங்கு காணினும் சக்தியடா;-தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா!-அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம்-அந்த
தாயின் கைப்பந்தென ஓடுமடா-ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும்-வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோஈ?-எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம்-அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!
காளை ஒருவன் கவிச்சுவையைக்-கரை
காண நினைத்த முழு நினைப்பில்-அன்னை
தோளசைத்தங்கு நடம்புரிவாள்-அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே-இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் – என
நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!
இப்பாடலைக் கேட்டவுடன் அனைவரும் பாராட்டினர்.  பாரதியார் இப்பாடலுக்கு ஏற்ற விளக்கமும் தன்னுடைய நண்பர்களுக்குச் சொன்னார்.  இக்கவிதையைத் தான் பாரதி சுதேச மித்திரன் இதழுக்கு அனுப்பினார்.  பின்னர் இது பல இதழ்களில் வெளிவரத் தொடங்கியது.  `பாம்பே ஸ்டாண்டர்டுஎன்னும் இதழில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது.  அப்போது இதழின் ஆசிரியராக கே.ஸ்ரீநிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

3 comments:

  1. மிகச்சிறந்த தகவல்; நன்றி தங்களுக்கு!

    ReplyDelete
  2. 👌👌👌👌👌👌

    ReplyDelete